சிறிலங்காவின் சர்வதேச குற்றங்கள் மீது சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறை வேண்டும்: ஐநா பொதுப் பேரவையிடம் கோரிக்கை!

"ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றியிருந்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் கருத்துக்கு, பதிலளித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்"

நாங்கள் முன்மொழியும் தற்சார்பான பொறிமுறை இடைக்காலத்தில் சான்றுகளைத் திரட்டிப் பாதுகாக்க வேண்டும்.”

— வி.உருத்திரகுமாரன்

UNITED NATIONS, NEW YORK, USA, September 28, 2018 /EINPresswire.com/ —

ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றியிருந்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் கருத்துக்கு, பதிலளித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவின் சர்வதேச குற்றங்கள் மீது, சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறை வேண்டும் என ஐநா பொதுப் பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபைக்கு சிறிலங்கா வழங்கியிருந்த வாக்குறுதிகளின் நிலைவரத்தை மதிப்பீடு செய்துள்ள மதிப்பீட்டு அட்டையை சுட்டிக்காட்டிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானத்தில் ஏற்றுக் கொண்டவாறு, நீதியை வழங்கக் கொடுத்த உறுதிமொழிகளைக் காப்பற்ற சிறிலங்கா பல முறை தவறி விட்டது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்கா ஓர் இனநாயக அரசாகையால், சிறிலங்காவுக்குள் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில்தான் நீதி கிடைக்க வாய்ப்புண்டு. சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு கோரும், 1.7 மில்லியன் மக்களின் கையெழுத்துப் போராட்டத்தையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துக்காட்டியுள்ளது.

'சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பும்படி இலங்கையின் வட மாகாண சபையும் ஒருமனதாகத் தீர்மானம் இயற்றியது என்பதையும் நான் சுட்டிக்காட்ட வேண்டும். நாங்கள் முன்மொழியும் தற்சார்பான பொறிமுறை இடைக்காலத்தில் சான்றுகளைத் திரட்டிப் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் இலங்கையில் சான்றுகள் அழிக்கப்படுகின்றன. சாட்சிகள் அச்சுறுத்தப்படுகின்றார்கள்' என இவ்விடயத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் எடுத்துக்காட்டியுள்ளார்.

தமிழர்களின் மனித உரிமைகளை சிறிலங்கா அரசு தொடர்ந்து மீறி வருவதாகத் தெளிவாக்குகிறது. அது தொடர்ந்து சித்திரவதையைப் பயன்படுத்துகிறது என்பதையும், உள்நாட்டளவில் இடம்பெயர்ந்த தமிழர்களை மீள் குடியமர்த்தம் செய்யத் தவறியதையும், வேறுபல மோசமான தோல்விகளையும் எடுத்துக்காட்டுகிறது. இவற்றுக்கெல்லாம் ஒருபோதும் யாரும் பொறுப்பாக்கப்படவே இல்லை என்கிறது. பாதிப்புற்ற தமிழர்கள் நீதியை மேலும் நெருங்கவும், ஐநாவின் ஆணையுரிமையையும் நம்பகத்தன்மையையும் விழுமியங்களையும் பாதுகாக்கவும் பன்னாட்டுச் சமுதாயத்துக்கு கடப்பாடு உண்டெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், குறைந்தது ஐ.நாவின் மூன்று அறிக்கைகளில் ஆவணப்படுத்தியுள்ளவாறு, சிறிலங்கா அரசு புரிந்த மனிதநேயச் சட்ட மீறல்களையும், மானிட விரோதக் குற்றங்களையும், புலனாய்வு செய்யவும் ஆவணப்படுத்தவும் அவை மீது வழக்குத் தொடுக்கவும் நடுநிலையான, சுதந்திரமான அனைத்துலக பொறிமுறை ஒன்றைத் தோற்றுவிக்குமாறு,ஐ.நா பொதுமன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

TGTE Urges UN General Assembly to Create an Int'l Independent Mechanism to Bolster Sri Lankan Int'l Crimes Investigation.

RESPONSE TO SRI LANKAN PRESIDENT'S REQUEST TO THE UN TO APPROVE HIS "PLAYBOOK FOR IMPUNITY"

https://world.einnews.com/pr_news/463185128/tgte-urges-un-general-assembly-to-create-an-int-l-independent-mechanism-to-bolster-sri-lankan-int-l-crimes-investigation

Contact: r.thave@tgte.org

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1-614-202-3377
email us here


Source: EIN Presswire