சென்னை பத்திரிகையாளர்கள், செய்தியாளர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு ! Chennai Press Meet: Monday (01-03)

Transnational Government of Tamil Eelam (TGTE)

** நாள் : 01-03-2021 திங்கட்கிழமை — ** நேரம் : காலை 12.00 மணி — ** இடம் : சென்னை பத்திரிகையாளர்கள் சங்க மன்றம்
( Chennai Press Club )

சென்னை, இந்தியா, February 28, 2021 /EINPresswire.com/ —

ஐ.நா மனித உரிமைச்சபையின் 46வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் இவ்வேளையில் 'சிறீலங்காவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துக' என்ற கோரிக்கையுடன் 01-03-2021 அன்று, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் மாண்புமிகு வி.உருத்திரகுமாரன் அவர்கள் இணைவழிகாணொளிக் காட்சி வழியாக பத்திரிகையாளர்களைச், செய்தியாளர்களை சந்திக்கவிருக்கிறார்.

1) ஐ.நா மனித உரிமைச்சபையில் இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு.

2) தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலும் இலங்கைத்தமிழர்களின் எதிர்பார்ப்பும்.

உட்பட பல்வேறு சமகால நிலைவரங்கள் குறித்த கருத்துக்களை பத்திரிகையாளர்களுடன், செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்.

இச்சந்திப்புக்கு பத்திரிகையாளர்கள், ஊடகங்கள், செய்தியாளர்களை பங்கெடுத்து செய்திகளை வெளிக்கொணர தோழமையோடு வேண்டுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

** இடம் : சென்னை பத்திரிகையாளர்கள் சங்க மன்றம்
( Chennai Press Club )

** நாள் : 01-03-2021 திங்கட்கிழமை

** நேரம் : காலை 12.00 மணி

இது தொடர்பிலான மேலதிக விபரங்களுக்கு :

Phone: +91 (0) 944-410-7920.
Email: sutharsansivagurunathan@gmail.com

இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களிற்கு எதிராகப் புரியப்பட்டுள்ள சர்வதேசக் குற்றங்களின் சில உதாரணங்கள்:

1) ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பொறுப்புக்கூறுதலுக்கான நிபுணர்கள் குழுவினுடைய 2011ம்
ஆண்டு பங்குனி மாத அறிக்கையின் பிரகாரம், இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ
விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான ஆயுதந் தாங்கிய யுத்தத்தின் இறுதி நிலைகளின் போது போர்க்
குற்றங்களும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களும் புரியப்பட்டுள்ளதாகவும் 40,000 க்கும் மேற்பட்ட
தமிழ் மக்கள் மரணித்துள்ளதாகவும் நம்பத்தகு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2) இலங்கை மீதான நடவடிக்கை தொடர்பான ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக்
குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையின் பிரகாரம் 2009 ம் ஆண்டின் இறுதிக் கட்ட யுதத்தத்தின்
போது 70,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காணாமற் போயுள்ளனர்.

3) அரசாங்கத்தால் யுத்த சூனிய வலயங்கள் (பாதுகாப்பு வலயங்கள்) எனக் குறித்தொதுக்கப்பட்ட
பிரதேசங்களில் இலங்கைப் படையினர் அடுத்தடுத்து குண்டுத்தாக்குதல்களையும் எறிகணை
வீச்சுக்களையும் மேற்கொண்ட போது பலர் கொல்லப்பட்டனர்;. வைத்தியசாலைகள் மற்றும் உணவு
விநியோக நிலையங்களின் மீது கூடக் குண்டுகள் வீசப்பட்டன. பலர் பட்டினியின் காரணமாக
இறந்ததுடன் மருத்துவ சிகிச்சையின்மையால் குருதிப்பெருக்;கேற்பட்டும் மரணித்தனர்.

4) 2017ம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக் கருத்திட்டமானது (ஐரீஜேபீ),
தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக கையாளப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட
கற்பழிப்பு முகாங்கள் பற்றிய விபரங்களை ஐ.நா விடம் கையளித்தது.

5) ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் 2013 சித்திரை
மாதத்திற்குரிய அறிக்கைக்கு அமைவாக, இலங்கையில் 90,000 க்கும் மேற்பட்ட யுத்தமூல விதவைகள்
உள்ளனர்.

6) குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அடங்கலாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற்போயுள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐநாவின் பணிக்குழுவானது உலகில் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரின் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கை இலங்கையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Transnational Government of Tamil Eelam (TGTE) Chennai Press Meet

Speaker: Prime Minister of Transnational Government of Tamil Eelam, Mr. Visuvanathan Rudrakumaran.

Topics:

1) Current UN Human Rights Council Session and India.

2) Upcoming Tamil Nadu State Elections and Eelam Tamil's expectations.

When: 01-03-2021 (Monday)
Time: 12:00 noon
Place: Chennai Press Club

For information contact:
Phone: +91 (0) 944-410-7920
Email: sutharsansivagurunathan@gmail.com

ABOUT THE TRANSNATIONAL GOVERNMENT OF TAMIL EELAM (TGTE):

The Transnational Government of Tamil Eelam (TGTE) is a democratically elected Government of over a million strong Tamils (from the island of Sri Lanka) living in several countries around the world.

TGTE was formed after the mass killing of Tamils by the Sri Lankan Government in 2009.

TGTE thrice held internationally supervised elections among Tamils around the world to elect 135 Members of Parliament. It has two chambers of Parliament: The House of Representatives and the Senate and also a Cabinet.

TGTE is leading a campaign to realize the political aspirations of Tamils through peaceful, democratic, and diplomatic means and its Constitution mandates that it should realize its political objectives only through peaceful means. It’s based on the principles of nationhood, homeland and self-determination.

TGTE seeks that the international community hold the perpetrators of war crimes, crimes against humanity, and genocide against the Tamil people to account. TGTE calls for a referendum to decide the political future of Tamils.

The Prime Minister of TGTE is Mr. Visuvanathan Rudrakumaran, a New York based lawyer.

Twitter: @TGTE_PMO
Email: pmo@tgte.org
Web: www.tgte-us.org

BACKGROUND

Tamils in the island of Sri Lanka faced repeated mass killings in 1958, 1977, and 1983 and the mass killings in 2009 prompted UN Secretary General Ban Ki-moon to appoint a Panel of Experts to report on the scale of the killings.

* According to UN internal review report on Sri Lanka, over 70 thousand Tamils were killed in six months in early 2009 and Tamil women were sexually assaulted and raped by the Sri Lankan Security forces.

* International Truth and Justice Project (ITJP) in February 2017 handed over details to UN of Sri Lankan Military run "Rape Camps", where Tamil women are being held as “sex slaves”.

* According to UK Foreign and Commonwealth Office report on April 2013, there are over 90 thousand Tamil war widows in Sri Lanka.

* Thousands of Tamils disappeared, including babies and children. UN Working Group on Enforced Disappearances stated in 2020 that the second highest number of enforced disappearance cases in the world is from Sri Lanka.

According to this UN report, the killings and other abuses that took place amount to war crimes and crimes against humanity. Independent experts believe that there are elements of these abuses that constitute an act of genocide.

Members of the Sri Lankan security forces are almost exclusively from the Sinhalese community and the victims are all from the Tamil community. A Buddhist Monk shot and killed a Sri Lankan Prime Minister 1959 for having talks with Tamils.

Tamils overwhelmingly voted in a Parliamentary election in 1977 to establish an independent and sovereign country called Tamil Eelam. This Parliamentary election was conducted by the Sri Lankan Government.

Transnational Government of Tamil Eelam
TGTE
9444107920398
sutharsansivagurunathan@gmail.com
Visit us on social media:
Twitter


Source: EIN Presswire